பரமநாதன் கணேசு - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : பரமநாதன் கணேசு |
இடம் | : உயிரோடு கலந்த ஊர் இணுவில்- |
பிறந்த தேதி | : 23-Feb-1955 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 15-Jul-2013 |
பார்த்தவர்கள் | : 192 |
புள்ளி | : 13 |
நான் ஓர் ஈழத்தமிழன். ஏதிலியாய் எனது மனைவி மற்றும் 3 ஆண் பிள்ளைகளுடன் இங்கு வாழ்ந்து வருகின்றேன். வாழ்வது இங்கானாலும் என் மனதை ஈழமண்ணிலிருந்து இழுத்து வர முடியாமல் தோற்றவர்களில் நானும் ஒருவன். 1975 களில் ஈழத்துப் பத்திரிகைகளில் கவிதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளேன். இதனைத் தவிர என்னைப் பற்றி சொல்ல எதுவும் இல்லை. தமிழில் பேசுவோம் தமிழனாய் வாழ்வோம்.
"பாரம் எல்லாம் வலியில்,
காயம் எல்லாம் மனதில்,
எப்படியும் உழைத்து-தான் ஆகவேண்டும்...
"காலையோ, மாலையோ,
இரவோ, பகலோ, வரும் சிற்றுந்து,
இவைகளை நான் எதிர்ப் பார்த்தால்தான் என் பிள்ளைகளுக்கு நண்பகல்-விருந்து"..
"உடம்பில் எத்தனை மூட்டைகளையும் அடுக்குங்கள்
என் பிள்ளையின் பசியை மட்டும் அடைத்தால்-போதும் "
"என் இரு கைகளும் சிவந்துப்-போகும்,
ஆனாலும்
என் மனமோ அதை மறந்துப்-போகும்
என் பிள்ளையின் பசியை உணர்ந்து".
"என் முதுகெலும்பு என்னிடம் சொல்லும்
நான் உடைந்-தாலும்
நீ உருக்குலைந்து விடாதே
பின்பு உன் பிள்ளையின் பச
தாய் என்னும் தெய்வம்.
வயிற்றினில் சுமந்தாய்! வலிதனில் துடித்தாய்!
வரும்சுகம் அனைத்தையும் துறந்தாய்!
உயிர்தனைக் கொடுத்தாய்! உவகையில் களித்தாய்!
உலகென என்னையே பார்த்தாய்!
துயர்தனைத் துடைத்தாய்! தூக்கமும் தொலைத்தாய்!
தோளினில் தூங்கிட வைத்தாய்!
உயர்வுற என்னை உலகினில் வளர்த்தாய்!
உனைவிட உயர்ந்ததும் எதுவோ?
அழகெனச் சிரித்தாய்! அள்ளியே அணைத்தாய்!
அமுதெனப் பாலினைச் சுரந்தாய்!
அழைத்திடி லோடி யருகினில் வந்தாய்!
அணைத்தொரு முத்தமும் தந்தாய்!
பிழையெனில் அடித்தாய்! பின்னரோ அழுதாய்!