சிரிப்புக்குத் தடை

சிரித்தால் போச்சு
சிரிப்பே ஆபத்து
என்று சிரிப்புக்கு
பல தடை,

தடை மீறி
சிரித்தால் வினை
பெருகும் சினம்
வரும் தாக்குதல்


தாக்குதல் பல
எப்பக்கம் என்று
தெரியாமல் நடக்கும்
சிற்றமாக முடியும்.

ஒரு சிரிப்புக்கு
இவ்வளவு இடிபாடா
என்னே உலகம்
விந்தையான மக்கள்

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (11-Aug-13, 3:44 pm)
பார்வை : 253

மேலே