அம்மா

அம்மா உனக்கு முன்று எழுத்து
ஆகாயத்தை முட்டும் உன் அன்பு
இரத்தத்தை பாலாய் தந்தாய்
ஈரேழு லோகங்களுக்கு இணையில்லா பாசமாய்
உன் உதிரத்தை என் உயிராக்கினாய்
ஊரார் கண்ணில் படாமல் சித்திரமாய்
என் விழியில் தூசிவிழ கலங்கினாய்
ஏதும் அறியா வயதில் இருந்து
ஐவிரல் பற்றி நடக்க வைத்து
ஒரு காயம் பட்டாலும் துடித்து
ஓராயிரம் ஆண்டு வாழ வாழ்த்தி
ஔவை பாட்டி மொழி கொடுத்து
தரணி என்னை போற்ற என்னும்
உன் அருமையை புகழ என்
கவிதை ஒன்று போதுமோ?

எழுதியவர் : கவின் பிரியதர்ஷினி (11-Aug-13, 10:12 pm)
Tanglish : amma
பார்வை : 279

மேலே