"காத்திரு"
உன் இலக்குகள் மறக்கவைப்பாள்
உன் இலட்சியங்கள் மறக்கவைப்பாள்
உன்னை தன்னையே நினைக்கவைப்பாள்
உன் காதலி என்பவள்
பெற்றவர்கள் வேண்டாம்
உற்றவர்வர்கள் வேண்டாம்
மானம் மறக்கவைப்பாள்
உன் காதலி என்பவள்
காதல் தவறில்லை நண்பனே
உன் பெற்றவர்களை
புண்படுத்தும் வரை,
எதுவும் தவறில்லை நண்பனே
உன் அன்னை சாபம்
வாங்கும் வரை
உன் வாழ்க்கை கடிதென்பதை விட
பெண் வாழ்க்கை கொடிதென்பதை
புரிந்துகொள் - அவள் வாழ்க்கை
தான் அவசியம் என்பதை அறிந்துகொள்
பதிவுத்திருமணம் இலகுதான்
கல்யாணத்திருமணம்
அறியாதவனுக்கு,
சொந்தங்கள் கூடி
ஆசி தரும்
அழகை தெரியாதவனுக்கு,
முடிந்தவரை முயற்சி செய்
அனைவரும் ஏற்கும்
திருமணம் வரை,
இல்லையென்றால்
காதல் செய்- அனைவரும்
ஒத்துக்கொள்ளும் வரை.