[470] மலைக்கும் என் நெஞ்சு..!

------------ஆசிரியப் பாவினம்---------------

வயல்வெளி விளைந்து வளைநெற் பயிரை
அயல்வளை உறங்கும் எலியினம் மேயும்
கயல்விழி மயக்கின் காளையர் போலும்
அயல்நாட் டினர்பொருள் அழகினில் மயங்கி
உலக மயமாம் நிலையது பேசித்
தலைவிற் றவராய்த் தம்பசி யடக்கத்
தலைவர்கள் பேசும் தன்மை
மலைக்குமென் நெஞ்சம்! மதிபிறழ் வேனே!
*****

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (12-Aug-13, 8:13 pm)
பார்வை : 65

மேலே