ஒரு பின் சிந்தனை
தொட்ட சிணுங்கியை
தொடாமல்
சிணுங்கினாள்
மனைவி...
பட்டம் பூச்சியாக
பறப்பது போன்ற
பாவனையில்
பறவையானாள்
காதலி...
விரல் கொண்ட
மருதாணியின் சிவப்பில்
வெட்கம் சிவந்தாள்
தோழி....
மௌனம் கலைத்த
அந்தி மழை
நனைந்தபடியே நடக்கும்
மனதில்
எழுதிக் கொண்டிருந்தது
ஒரு கவிதையையும்
சில நினைவுகளையும்.....