வெற்றிப்படிக்கட்டு

வளரும் வருங்காலத் தலைமுறையே
ஏங்கிடும் எதிர்காலம் ஏற்றம் பெற்றிட
கற்றிடும் கல்வி கற்பிக்கும் திறனுடன்
பெற்றிடும் அறிவு உங்களுக்கு உரமாகி
சான்றோர் அறிவுரை அனுபவப் பாடமாகி
வல்லோர் வாழ்க்கை வலிவினைத் தந்து
முன்னோர் ஆசிகள் முழுதும் பெற்று
முன்னேற்றப் பாதையை அறிந்திட்டு
வெற்றிப்படிக்கட்டில் பாதம் பதித்தால்
வாழ்வும் வளமாகி நாளும் மகிழலாம்
நலிந்தோர் வாழ்வுபெற வழிவகுத்திட்டு
நாடும் முன்னேற துணை நிற்கலாம் !
பழனி குமார்