எனது குறிப்பேட்டின் பக்கங்கள்… [14]

வெறும்
ரத்தச் சேமிப்பு
நிலையமாக இருந்த
இதயத்தை...
கனவுகள் கற்பனைகளை
உற்பத்தி செய்யும்
களஞ்சியமாக
மாற்றிவிட்டாய்
நீ !
[34]
************************
எங்கெங்கோ பயணிக்கிறோம்
உன் விருப்பமான இடத்திற்கும்
உனக்காக
நான் தேடும் உலகத்திற்கும்
தடையின்றிப் பயனிக்கிறோம்
நொடியில்
பிரபஞ்சத்தின் எல்லையில்
நிற்கிறோம்
நினைத்ததை அடையாமல்
திரும்புவோமா என்கிறோம்
எல்லாமே சாத்தியம்தான்
நீயும் நானும்
மந்திரப் பார்வையால்
கட்டுண்டு கிடக்கும்போது !
[35]
**********************
என்னிடமிருந்த புத்தகத்தை
வாங்கிய நீ
இத்தனை[யும்] கவிதைகளா என்று
வியந்து பார்க்கிறாய்.,
அத்தனையும்
உனக்கு எழுதப்பட்டவை
என்பதைப் புரியாமல்
இன்னும்கூட
நேசிக்கப்படாத புத்தகமான
என்னைப் பற்றியும்
வாசிக்கப்படாத கவிதைகளான
என் எண்ணங்களைப் பற்றியும்
என்றாவது சிந்திப்பாயென
காத்திருக்கிறேன்...
[36]
**********************
[ பக்கம்… 15..... தொடரும் ]