உன் காதல் மட்டும் பிடிக்கலை ...

உன்னழகு பிடித்திருக்கு ....
உன் திமிரு பிடிக்கலை ....
உன்நடையழகு பிடித்திருக்கு ....
நீ வீராப்பாய் நடிப்பது பிடிக்கலை ...
உன் அழகான பேச்சு பிடித்திருக்கு ...
நீ வாய் திறந்து பேசும் பொய் பிடிக்கலை ...
நீ பம்பரமாய் சுற்றி வருவது பிடித்திருக்கு ...
நாய் போல தொடர்ந்து வருவது பிடிக்கலை...
உன் துடிக்கும் கண்அழகு பிடித்திருக்கு ...
உன் கண் முழி பிடிக்கலை...
உன் சிரிப்பழகு பிடித்திருக்கு ...
ஆனாலும் உன்னை பிடிக்கலை ...
மலர்ந்த பூவாய் சிரிப்பது பிடித்திருக்கு ...
காய்ந்த புல்லாய் நீ போவது பிடிக்கலை ...
உன் கலரு பிடித்திருக்கு ...
உன் தலை கணம் பிடிக்கலை ...
உன் அரும்பு மீசை பிடித்திருக்கு ...
என்னை பருந்து போல வட்டம் இடுவது பிடிக்கலை ...
நீ பேசும் தமிழ் மொழி பிடித்திருக்கு ...
கிறுக்கனாய் நீ பேசும் ஆங்கிலமொழி பிடிக்கலை ...
உன் நேர்மையான குணம் பிடித்திருக்கு ...
என் பின்னால் சுற்றுவது பிடிக்கலை ...
உன் கள்ளம் இல்லா அன்பு பிடித்திருக்கு ...
வேலை வெட்டி இல்லாமல் வெட்டிப்பயலாக இருப்பது பிடிக்கலை ...
உன் அன்பான நட்பு பிடித்திருக்கு ...
உன் காதல் மட்டும் பிடிக்கலை ...