இது காதலடா !
எனக்குள்ளே இருந்தும்
என் நிழலாய்
நீ வசித்தும்
உன் அவளாக
நானே இருந்தும்
எங்கோ ஓர்
துயரம் மனதின் ஓரம்
நீ இல்லா கணங்களில்
முடிவில்லா நேரங்கள்
இமைகளின் ஈரத்தைத்
துணை கொண்டு ..
விழித்திறவா நிலையிலும்
காட்சிப் பிம்பங்களாய்
உன் நினைவுகள்..
எனக்கான உன் நிழல்களை
நிறமூட்ட உன் வருகையை
எதிர்பார்த்து கலையாத
எண்ணங்களைக் (வண்ணங்களை)
கொண்டு இங்கே நான்..
வண்ண மலர்ப் பூங்கொத்தாக..