சுதந்திர தினம்

துப்பாக்கி முனையில்
தேசிய கோடி ஏற்றம் !

தெருக்களில்
ஊரடங்கு உத்தரவு !

அயல் நாட்டாரின்
அணுகுண்டு பயம் !

தலைநகரில்
வரலாறு காணாத
பாதுகாப்பு !

அங்கிங்கெனாதபடி
எங்கும் சோதனை !

அண்டை நாட்டவரின்
தீவீரவாத அச்சுறுத்தல் !

இப்படி இன்னும் பல! பல !

ஓ பலே! பலே !

புரிந்து கொண்டேன் !
இன்று சுதந்திர தினமாம் !

**********தன்னம்பிக்கையுடன் சிங்கை கார்முகிலன்

எழுதியவர் : சிங்கை கார்முகிலன் (14-Aug-13, 7:43 pm)
Tanglish : suthanthira thinam
பார்வை : 1003

மேலே