மதிப்பும் மிதிப்பும்

உலகம் கேட்டு நாளாச்சி
உத்தமரெல்லாம் போயாச்சி
உண்மை இங்கே ஊமையாச்சி
உருவாக்கியவன் பெயர் நிலைச்சாச்சி
உருகும் மெழுகு யாரிங்கே?
உருக்கும் தங்கமூலாம் பலரிங்கே.

நெஞ்சுக்குள்ளே ஈரமில்லே
நிமிர்ந்து நடந்தால் வீரமில்லே
வஞ்சக வினைகள் மாறவில்லே
வசதி வந்ததால் இந்தத் தொல்லை

தானாக உழைப்பவன் கூட
வீணாக வாழ்வதை மறந்தான்
தர்மம் செய்து வாழ்ந்தவன் கூட
தகரம் ஏந்தி பிழைக்கின்றான்

அடுத்தவன் அழுகையில்
கெடுத்தவன் சிரிக்கின்றான்
கெடுத்ததால் இவன் மதிக்கின்றான்
கெடுத்ததைக் கேட்டால் மிதிக்கின்றான்

எல்லையோரம் எல்லைமீறல் நடக்குது
தொல்லைதரும் தீவிரவாதமோ - வஞ்சத்தால்
பலமாக அரங்கேறுது - உள்ளொன்று வைத்து
புறமொன்று பேசுவோர் இங்கே பலருண்டு

உதட்டளவில் புன்னகைத்து
உள்ளத்தளவில் புதைக்க நினைப்பதுண்டு
கள்ளத்தனத்தில் கைத்தேர்ந்து
கபட நாடகம் ஆடுவோர் பலருண்டு

மதிப்பதைப் போல் நடிப்பதுண்டு
மிதிப்பதற்கு கணக்குப் போடுவதுண்டு
வெள்ளுடை ஆடையில்
வேங்கைகள் திரிவதுண்டு
வெட்ட வெளிச்சத்தில் பழிஉணர்வு
வெட்டுப் பட்டு வீழ்வதுண்டு

மரியாதைக்கு மதிப்பதுண்டு
மனம் மாறினால் மிதிக்க துணிவதுண்டு
மதிப்பும் மரியாதையும் மாறியதுண்டு
மனிதனின் மனமெல்லாம் கரித்துண்டு.

எழுதியவர் : சு.சங்கு சுப்ரமணியன் (15-Aug-13, 6:48 am)
சேர்த்தது : s.sankusubramanian
பார்வை : 108

மேலே