பாவிகள் – சுதந்திரம்

பாரதியும் இங்கு பாவி தான்!
பாவம் சுதந்திரத்தை பெற்று தந்தானே!
பகத்சிங்கும் இங்கு பாவி தான்!
பாவம் இளைஞரை நம்பி சென்றானே!
நூறு இளைஞரை கொண்டு
நல்ல பாரதம் தருவேன் என்றான் விவேகானந்தன்!
நூறு கோடியில் அறுபது கோடி
இளைஞன் உண்டு இன்று!- பாவம்
நல்ல பாரத்ததைதான் தேடுகிறானாம்!
இந்தியா வல்லரசாகும் என்று
இனிமையாய் கனவு காண்கிறார் கலாம்!
இளைஞன் இங்கே இருட்டில் தெரியும் வெளிச்சத்திற்காக
இறக்கிறான் நாண்டு கொண்டு!
இல்லாத சுதந்திரத்தை இருப்பதாய் நினைத்து
இலவசமாய் ஒரு நாள் விடுப்பு!
இதை தவிர இதற்க்கு இல்லை
இந்தியாவில் மதிப்பு! -
இனியே சுதந்திர தின வாழ்த்துக்கள்!