சில ஹைக்கூ கவிதைகள் உங்களுக்காக

***நேற்று வரை வீட்டிலிருந்த ஆடு
விற்ற பிறகும் அம்மா என்று
அழைத்துக்கொண்டே சென்றது
வளர்த்தவளை பார்த்து***

***பால் வியாபாரி
தயிர் வியாபாரி ஆனான்
நேற்று பால் விற்காததால்***

***மழைக்கு வந்து
வெயிலில் குடை பிடித்து
நின்றது காளான்***

***பெரும் மழையால்
வீடுழந்து மனித வீட்டிற்க்கும்
வசிக்க வந்தது எறும்புகள்***

***கிழிந்த உடையில்
உடலை மறைத்தால்
ஏழைப்பெண் எதிரில்
உடலை காட்டியபடி
நாகரீக பெண்***

***வானில் தெரியும் நிலா
ஏழைவீட்டில் மட்டும்
கூரையின் ஓட்டை வழியே***

***சேராக இருந்தாலும்
கால் வைக்க தயங்குவதில்லை
விவசாயி தோலி நிலத்தில்***

***மருந்து தெளித்த வயல்வெளியில்
வண்ணத்துபூச்சியின் மரணம் உணர்த்தியது
இயற்கையின் அழிவை***

***கூண்டுக்குள் அடைபட்ட கிளி
சோசியம் சொன்னது
சுதந்திரமான வாழ்க்கை அமையுமென்று***

***நேற்று பெய்த மழையால்
இன்று பள்ளி விடுமுறை
வெயிலில் விளையாட போனான்
பள்ளி சிறுவன்***

எழுதியவர் : பாலமுதன் ஆ (25-Dec-10, 5:42 pm)
சேர்த்தது : பாலமுதன் ஆ
பார்வை : 554

மேலே