உன் கேள்விக்கான பதில்....
விளையாட்டாய் ஒரு நாள்
உன்னிடமிருந்து வந்தது ஒரு குறுஞ்செய்தி
என் பெயர் கொண்ட குழந்தையை கண்டால்
என்ன செய்வாய் என்று...
உன் கேள்விக்கு பதிலளிக்காமல்.,
நான் மீண்டும் கேட்டேன்
வருங்கலத்தில் என் குழந்தையை பார்த்தல்
நீ என்ன செய்வாய் என்று...
நீயும் பதில் கூறாமல்
என் கேள்வியையே என்னிடம் கேட்டாய்
உன் குழந்தையை நான் பார்க்கும் போது தெரிந்துகொள்வாய் என்றேன்...
ஆனால்..,
உன் கேள்விக்கான என் பதில் இதோ
.
.
.
.
.
வரும் காலத்தில்
உனது எனது ஏதுமின்றி
நான் பார்க்கபோகும்
நமது குழைந்தையை
கரம் மீது மலராய் தாங்காமல் வேறென்ன செய்வேன் என் காதலே...