சுதந்திர தேசம்
துப்பாக்கி முனையில் கொண்டாடப்படுகிறது
சுதந்திர தின விழா...
ஆயுதம் ஏந்திய காவல் பாதுகாப்போடு
உரை நிகழ்த்துகிறார் பிரதமர்...
குண்டு துளைக்காத காரில் பயணம்
செய்கிறார்கள் தேசத்தலைவர்கள்...
ஆயுதமும் வெடிகுண்டுமாய் சுதந்திரமாய்
வலம் வருகிறார்கள் தீவிரவாதிகள்..
எதைபற்றியும் கவலைப்படாமல் பேச்சில்
கோட்டை கட்டுகிறார்கள் அரசியல்வாதிகள்..
தலைவனின் படம் வெளியாகிறதா
எனும் வேட்கையில் இளைஞர்கள்...
தொலைக்காட்சி ஒருபுறம் அலைபேசி ஒருபுறம் என
சிதையும் பிஞ்சு உள்ளங்கள்...
பாமரனோ ஏதும் அறியாமல்
இன்றைய உணவுக்கு வழி தேடி,,,
எங்கே போகிறது சுதந்திர தேசம் ???