காலம்
காலம் என்னும் மங்கை,
புவி என்னும் ஆடவனை,
பார்த்த மாத்திரத்தில்
பயத்தில் அழுகிறாள் - மழைகாலம் !
அடுத்த சந்திப்பில்
கோபத்தால் கண்சிவக்கிறாள் - கோடைகாலம் !
பின்னர்,இருவரிடையே
காதல் மலர்ந்து
மனம் குளிர்கிறாள் - பனிக்காலம் !
முடிவில்
அவர்கள் வாழ்வில்
இன்பம் நிலைத்தது - வசந்தகாலம் !!!