மங்கை - மலர் - கவிதை - கடல்

(சிலேடை வெண்பா)

இதழ்கள் சொரிவால் இனியமுகப் பூப்பால்
இதமிகு வாசப் பொலிவால் - பதமாக
சேர்ந்தாரைச் சீரடையச் செய்யும் மலர்களும்
பேரழகு மங்கையரும் நேர்!

உவமையின் உட்பொருள் உய்த்தல் அரிதாம்
உவகையாய் உற்சாகம் ஈனும் - தவமிருந்து
யாத்த கவிதையும் யாழ்போன்ற பெண்மனமும்
ஒத்தவின மென்று உணர்!

ஆழம் அறிவீரோ? ஆர்ப்பலை எண்ணுவீரோ?
நீளும் கரைகள் அளப்பீரோ? - நீலநிற
ஆழ்கடலும் வேல்விழி ஆரணங்கு நேரென
நீள்முழக்கம் நெஞ்சாரச் செய்!

வெ. நாதமணி.
16/08/2013.

எழுதியவர் : வெ. நாதமணி. (16-Aug-13, 8:52 pm)
பார்வை : 244

மேலே