வாலி - இரங்கற்பா ( வெண்பா வடிவில் )
( 1 )
கவியால் தமிழினை தாங்கிய உன்னையே
பாவியாம் காலனவன் கொள்ள - தவியாய்
தவிக்கும் தமிழினது கண்ணிலே நீரையே
மேவிடச் செய்தது மேன் .
( 2 )
சுகமாய்த் தமிழில் கவிதைகள் தந்து
இகமுழுதும் மாறாப் புகழ்கொள் - பிகம்நீ
தகமாகிப் போன தகவலை கேட்ட
செகமே விகலத்தில் காண் .