கடின உழைப்பாளிகள்

முச்சக்கர வண்டியோடி
மூன்று வேளை உண்டிக்காக
முக்காலமும் பாடுபடும்
கடின உழைப்பாளிகள்
நாங்கள் .....!!!

கைதட்டுதல் வெற்றியின்
சின்னம் - எங்கள் சின்னமே
கைதட்டல் தான்- நீங்கள்
தட்டும் ஒவ்வொரு தட்டலும்
எங்கள் வீட்டில் பல வயிறுகள்
நிரப்பப்படுகின்றன ....!!!

தட்டுங்கள் திறக்கப்படும்
என்றார் -பிரான்
நீங்கள் தட்டுங்கள்
நிறுத்தப்படும் முச்சக்கர வண்டி
என்கிறோம் நாங்கள் ...!!!
எங்கள் வண்டி சிறிது
ஆனால் நாங்கள் செய்யும்
சமூக சேவையோ பெரிது ....!!!

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (16-Aug-13, 9:11 pm)
பார்வை : 76

மேலே