புதுக்கவிதையாய் மாடன் dress
இன்றைய ஆடவர்
அதிகம் விரும்பும்
பெண்களின் மாடன் dress
அழகு என்றாலும்
பழமையுடன் போட்டியிட முடியாது
பழமையில் அடுக்கிடை
தெரியும்
வேறு பெரிதாய் புரியாது
புதுமையில் முழுமையும்
யாவர்க்கும் தெரியும்
தமிழ் படித்த ஒருவருக்கு
தெரியும்
தெரிந்தார்க்கு மட்டும்
தெரியும் பொக்கிஷம் அது
புதுமையில்
ஆங்கிலம் கலந்து
முழுமையும் யாவர்க்கும்
புரியும்
எல்லாம் கலப்படம் தான்
ஆனால் வெளிப்படை உண்மை
வெள்ளிடையாய் தெரியும்
இன்று பிறந்த மானிடர்க்கு
பழமை பிடிக்காது
எனினும் விதிவிலக்காய்
ஓரிருவர் தமது
கவிக்கு பழமையை
போர்த்து அழகு பார்ப்பார்
ஐயா இது தான்
இன்றைய பொக்கிஷம் அதுவல்ல
புதுமைக்கு நடுவில்
தேடலில் தான் பழமை.
பழமையில் தான் தேடல்
பழமை என்றும் புதுமையை
விரும்பியதில்லை
எனினும் இதனை சிலரில்
விதிவிலக்காய் மறுதலிக்கிறேன்