உன்னை தேடும் என் கண் பார்வை 555

பிரியமனவளே...
நீ யாரென
தெரியாமலே...
உன் புகைப்படம்
பார்த்த வினாடி முதல்...
உன்னை நினைக்க
தொடங்கிவிட்டேன்...
என்னை யாரென
தெரியாமலே...
என் புகைப்படம் கூட
கண்டதில்லை நீ...
பலமுறை நாம்
சந்தித்ததுபோல்...
நீ முதல் முறை
என்னோடு உரையாடினாய்...
பல சந்திப்புகளின்
நினைவுகளை போல...
என்னில் நீ
இருகிறாய்...
உன்னில் நான்
தெரியவில்லை...
எனக்கு உன்னிடம்
கேட்கவும் தெரியவில்லை...
எனக்கு உன்னிடம்
சொல்லவும் தெரியவில்லை...
உன்னை நான் சந்திக்கும்
அந்த நாள்...
நம் வாழ்வின் புதிய
உதயநாளாக மாறவேண்டும்...
உன் புன்னகையில்
சம்மதம் தருவாயா கண்ணே.....