மாய இரவின் அந்த இரகசியம் !.....
அவனை
கண்டும் காணாத
காலை பொழுதில்'
நான் காணும்
வெள்ளிநிலா
மறையும் வண்ணம்
விண்மீன் வெளிச்சம்
வெளுக்கும் வண்ணம்
விடிகிறதே !
இந்தபூமி !
வீழ்கிறதே இரவு
இரவுகளை நாம் இழக்க
விழி விழிக்கிறான்
உதிக்கும் சூரியன்
உதயமாக
உறங்கும் பறவைகள்
உதயமாகும்
எழில்மிகு வெளிச்ச்சம்கான !
அண்டத்தில் வாழும்
அனைத்து பறவைகளும்
ஆனந்தமாய் கவி பாட !
பறவைகள் பாடும்
கவி கேட்டு
பரந்த உலகில்
உறங்கும் மனிதன்
தான்
இரவில் காணும்
கனவுகள் களைந்திட !
கனவுகளில் காணும்
மாய வாழ்க்கை
மாய்ந்திட !
மறைகிறதே
இந்த மாய இரவு !
இந்த மாய இரவை
மறைத்துக்கொண்டு
உதிக்கும் உதயத்தை
காண
கண் விழிக்கிறான்
மானிட மனிதன் .
மனிதவிழிகள்
விழிக்கும் விடியலை
காண !
விழிப்புடன்
எழுந்து
எழில்மிகு
அழகை கண்டு
தன் கரங்களை கொண்டு
விடியும் விடியலை
வணங்கி
வரவேற்கிறான்
விடிவெள்ளியாய் !
என்றென்றும்.
என்றும் அன்புடன்