மௌனம் என்னும் சாவி

மௌனம் .....
என்னும் சாவி போட்டு
என் மனக்கதவை
திறந்தவளே ....
இப்படி ......
உள்ளே நுழைந்து விட்டு
ஒன்னும் தெரியாதவள்போல்
இருக்குறாயே
என் .........
இதயத்தை கானவில்லையடி
காவல் துறையில்
புகார் கொடுத்தேன்
கண்டுபிடித்து தருவதாக
சொல்லி இருக்குறார்கள்
நீதி துறையில் .......
மனு கொடுத்தேன்
விசாரணையை
அடுத்த மாதம்
ஒத்திவைதிருக்குறார்கள்
என் ........
நண்பனிடம் முறையிட்டேன்
அவன்தான் சொன்னான்
அவளுக்கு சொந்தமானதை
அவள் எடுத்து
சென்று விட்டாள்
அதுக்கு என்ன ?இப்போ
என்றார்கள்
அதுவும் சரிதானே !