என் பெயர் என்ன ?
நான் குழந்தையாக இருந்தபோது - என் தாய்
என்னை : " கண்ணே ! மணியே ! தங்கமே !"
என்றெல்லாம் அழைத்தாள்.
என் தந்தை என்னை " ராஜா வாடா !! சிங்கக்குட்டி "
என்றழைத்தார்
ஏனோ குழப்பம் என் பெயர் என்ன ? என்று.
பெரியவனானேன்- பள்ளிக்கு சென்றேன்
பாடத்தில் சந்தேகம் ஆசிரியரிடம் கேட்டேன்
அவரோ என்னை - "மக்கு பயலே" என்றார்
வாகனம் ஒட்டி சல்லையில் சென்றேன்
மஞ்சள் விளக்கு பார்த்து நிறுத்த கோட்டில்
வண்டியை நிறுத்தினேன்
பின்னால் வந்தவர் உரசிக்கொண்டு முந்திச்
சென்று முழிதுப்ப்பார்த்து என்னை "ஏறுமே"
என்றார்.
ரேஷன் கடைக்கு போனேன் - கடைக்காரரிடம்
தரமான பொருளை, சரியான எடையில் கேட்டேன்
கடைக்காரர் என்னை " சாவு கிராக்கி " என்றார்.
மீண்டும் குழப்பம் - என் தாயிடம் கேட்டேன்
என் பெயர் என்ன அம்மா ? -
நீட்டி முழக்கி அம்மா சொன்னாள்,
" அட கிறுக்குபய மவனே !! "
மகளுக்கு திருமணம் - வரதக்ஷணை கொடுக்க எதிர்த்தேன் . - என் மனைவி சொன்னாள்
" துப்புகெட்ட மனுஷா "
மகனுக்கு திருமணம் - வரதக்ஷணை வாங்க மறுத்தேன், - என் சுற்றம் சொன்னது
" பைத்தியக்காரன் " என்று
மறுபடியும் யோசித்தேன் நான் யார் ?
என் பெயர் என்ன ?
என் மனசாட்சியை கேட்டேன் என் பெயர் என்ன ?
அது, கோபமாக என்னை பார்த்து சொன்னது -
இதனை நடந்தும், இதனை கேட்டும்
எதிர்த்து கேட்க தயிரியம் இல்லாத நீ ஒரு....
" நடைப் பிணம் " என்று.
புரிந்துகொண்டேன் ! புரிந்துகொண்டேன் !
நான் யாரென்று.
இனிமேல் நான் தவறுகளை தட்டிக்கேட்கும்
" தன்மானக்கரன் "