அதிக பிரசங்கி...!

சிரிச்சுகிட்டே இருக்கணும் எப்போ தெரியுமா...? எப்போ நிறைய சேலஞ்சும் ரிஸ்க்கும் லைஃப்ல வருதோ அப்போ....!!! எப்பவுமே ஒரு வேலைய திரும்பி திரும்பி செய்றதுல எனக்கு எல்லாம் எப்பவுமே ஒத்து வராது. தினம் தினம் புது புது விசயம் புது புது ரிஸ்க்.... தலைக்கு நேரே பறந்து கத்தி வர்ற வரைக்கும் நான் பாத்துக்கிட்டு பாட்டு கேட்டுகிட்டுதான் இருப்பேன்..ஆனா கத்தி வரதை கவனிக்காம இருக்க மாட்டேன். வரட்டும் பாத்துக்கலாம்...கத்திய வீசுனவனுக்கு என்ன பாத்தா அடப் பைத்தியமே இவ்ளோ தூரம் முன்னாடியே பாத்துட்டியே இன்னும் ஏன் கண்டுக்காம இருக்கன்னு நினைப்பு வரும்...

எனக்குத் தேவை ஒரு 2 செகண்ட் அதுல இருந்து எஸ்கேப் ஆக பட் அந்த ரெண்டு செகண்ட் எப்போன்னு நான் முடிவு பண்ற வேகம் இருக்கு பாத்தீங்கன்னா திட்டமிடாம ச்ச்ச்சுமா டக்கு டக்குனு நடந்துடும். கத்திய எப்பவுமே வீசுறது யாருன்னு கேக்குறீங்களா?????? மனுசன் எல்லாம் ஏன் பாஸ் நம்ம மேல கத்திய வீசப் போறாங்க....நம்ம மேல கத்தி வீசுற ஒரே ஆளு வாழ்க்கைதான்...!

ஒரு சப்தமில்லா வாழ்க்கை வாழும் ஆசையில் பயங்கர பிசியான ஒரு வாழ்க்கை சுழற்சிக்குள்ள மாட்டிகிட்டு தினமும் கனவுகளில் எனது நிசப்த நேரங்களைப் பற்றி சிந்திக்க வேண்டியதாயிருக்கு. ஒரு வேலை சாந்தியும் அமைதியுமான ஒரு லைஃப் இருந்திருச்சுன்னா நாம பிசியா இருக்குற மாதிரி எப்பவும் சேலஞ்ச்சிங்கா இருக்குற ஒரு லைஃப் வேணும்னு ஆசை வந்து இருக்குமோ என்னவோ தெரியாது.

பட் இப்போ எனக்கு அப்டி தோணுது. சில நேரங்கள்ல யார்கிட்டயும் பேச மட்டும் பிடிக்காம இல்ல...யாரு பேசினாலுமே அந்த வார்த்தைகள் செவிகளின் வழியே ஊடுருவி மூளைக்குள்ள போயி அங்க ஏற்கனவே செய்தியா குவிஞ்சு கிடக்குற இடத்துல அடிச்சு பிடிச்சு சண்டை போட்டு தானும் ஒரு இடத்தை பிடிக்க முயலும் போது.......ஓ........மை......காட்............வில் யூ ப்ளீஸ் ஸ்டாப் இட்ன்னு கத்தணும் போல இருக்குங்க..!!!

பேச்சு பேச்சு பேச்சு.. பேச்சு .......எங்கு பாத்தாலும் பேச்சு. யாராச்சும் பேசிகிட்டே இருக்காங்க...! எதுத்தாப்ல இருக்க ஆளுக்கு தேவையோ தேவையில்லையோ என் புலமைய காட்ட நான் பேசிகிட்டே இருப்பேன் அப்டீன்ற ஒரு புற்று நோய் நிறைய பேருக்கு இருக்கறத உணர்வு பூர்வமா தெரிஞ்சுக்கிட முடியுது. பேசி பேசி உலகத்தை மாத்த முயன்றவங்க எல்லாம் தானே அதுக்கு ஒரு உதாரணமா இருந்தாங்க இப்போ எல்லாம் அப்டீ எல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது. எல்லோருமே ஹிப்போகிரேட்தான் இன்க்ளுடிங் மீ. இதுல என்ன ஒரு மேட்டர்னா சொல்றது ஒண்ணு செய்றது ஒண்ணு அப்டீன்றதுல எத்தனை சதவீதம் வேறு படுறாங்க அப்டீன்றத வச்சுதான் அதுல நல்லவங்க கெட்டவங்கன்னு பிரிச்சுக்கிறோம் தட்ஸ் ஆல்.

தனிமை வேண்டும், அமைதி வேண்டும் இப்டி எல்லாம் யோசிக்கும் போது அப்டி தனிமைய அனுபவிக்கும் போதும், அமைதிய தேடி போகும் போதும் லெளகீக பந்தங்களோடு ஏற்பட்டிருக்கும் கடமைகளை நிறைவேத்திடனும் அப்டீன்னும் தோணுது. ஏன்னு கேட்டீங்கன்னா இந்த வாழ்க்கை நானா உருவாக்கி கிட்டதா? இல்லை? இந்த பிறப்பு நானே ச்ச்சூஸ் பண்ணினதா? அதுவும் இல்லை எல்லாமே ஒரு செட் அப், கிரியேட்டெட் அல்லது உருவாக்கப்பட்டது.

நான் இப்டி வாழணும் அப்டி வாழணும்னு விரும்புறேன். அப்டி வாழும் போது நான் நினைச்ச மாதிரி சில விசயங்கள் நடக்குது. அப்டி நடக்கும் போது உடனே நான் ப்ளான் பண்ணி அச்சீவ் பண்ணினேன்னு சொல்லிக்கிறேன். அப்டி நடக்காத போது நான் நினைச்சது நடக்கல அப்டீன்னு ஒரு பில்டப் கொடுத்து வாழ்க்கைய குறை சொல்றேன்.....

ஆக மொத்தம் என்னதான் நாம அப்டி இப்டி அலைஞ்சு திரிஞ்சாலும் சரியா அலைஞ்சு திரியணும் அப்பதான் நடக்குறது ஒழுங்கா நடக்கும். காலையில தூங்கி எழுந்து டீ வேணும்னு நினைச்சுகிட்டே இருந்தா டீ வந்துடுதா என்ன? பால் வாங்கணும், அடுப்ப பத்த வைக்கணும், டிக்காசன வைக்கணும்.. இவ்ளோ இருக்கு.

டீ போடுறது எப்டீன்னு ப்ளான் பண்ணி பத்து பக்கத்து டீட்டெய்ல்ஸ் எழுதலாம். டீ குடிக்கிறது எப்டீன்னு சொல்லிக் கொடுக்கலாம். பட் டீ போடணும்னா.......எந்திரிச்சு போயி நாமதான் வேலை பார்க்கணும் இல்லையா..பேசிட்டே இருந்தா டீ டீயாயிடுமா....அங்க கூட்டத்துல ஒருத்தர் கத்துறார் பாருங்க..எனக்கு மனைவி இருக்காங்கன்னு........ஹா ஹா ஹா பாத்து பாஸ்... ஆணாதிக்கம்னு சொல்லி பிரச்சினை பண்ணிடப் போறாங்க...!

மறுபடியும் ' பேச்சு ' பத்தின மேட்டருக்கு வாங்க.........வழி மாறி போய்ட்டோம்ல....

பேசி எல்லாம் யாருக்கும் யாரும் புரிய வைக்க முடியாது சார். பேசி புரிஞ்சு ஒருத்தர் நீங்க சொல்றத கேக்குறார்னா அது உங்க பேச்சால வந்த மாற்றம் இல்லை. அப்படி மாறும் தன்மை அவர்களுக்குள் ஏற்கனவே இருந்திருக்கிறது. நீங்க இல்லேன்னா கூட ஏதோ ஒரு காட்சியோ பாடலோ அல்லது புத்தகமோ அந்த வேலைய செஞ்சு இருக்கப் போகுது. இதுக்கு ஏன் நான் பேசி ஒருத்தர மாத்திட்டேன்னு நாம நினைக்கணும்?

லவோட்சூ என்ன பண்ணுவாங்களாம் தினமும் வாக்கிங் போவாங்களாம் பக்கத்து வீட்டுகாரர் கூட. இரண்டு மைல் தூரம் போவாங்களாம் ஆனா எதுவுமே பேசிக்க மாட்டாங்களாம். ஆமால்ல போறது வாங்கிங் அங்க எதுக்கு பேச்சு? நியாயம்தான? ஒரு நாள் பக்கத்து வீட்டுக்காரர் வீட்டுக்கு ஒரு கெஸ்ட் வந்து இருந்தாங்களாம். அந்த கெஸ்ட்டும் வாக்கிங் வர்றேன்னு கூட வந்தாராம். மூணு பேரும் ரெண்டு மைல் நடந்துகிட்டு இருக்கும் போது காலையில சூரியன் உதயம் ஆகுற காட்சிய பாத்த அந்த பக்கத்து வீட்டுக்காரரோட கெஸ்ட் சத்தமா சொன்னாராம்......' என்னே அழகிய சூரிய உதயம்'னு அவ்ளோதான் நடந்து இருக்கு...

வாக்கிங் முடிஞ்சு வீட்டுக்கு திரும்பிய உடன் பக்கத்து வீட்டுக்காரரின் கெஸ்ட் முதல்ல வீட்டுக்குள்ள போயிட்டாராம். அப்போ பாத்து லாவோட்சூ சொன்னாராம் பக்கத்து வீட்டுக்காரர் கிட்ட " உன் வீட்டுக்கு வந்த கெஸ்ட் ஒரு வாயாடியா இருப்பான் போல இருக்கே? இனிமே கூட்டிட்டு வராத'னு சொல்லிட்டு லாவோட்சூ தன்னோட வீட்டுக்குள்ல டக்குனு போயிட்டாராம்.

இதுல என்ன மேட்டர்னா? சூரிய உதயத்தை மூணு பேரும் பாத்தாங்க அது அருமையான சூரிய உதயம்னு அந்த கெஸ்ட்டுகு தோணின வரைக்கும் சரிதான்.. அதை எதுக்கு சத்தமா சொல்லணும்? இது முதல் கேள்வி சரியா? இரண்டாவது கேள்வி அப்டி அழகான சூரிய உதயம்னு மத்த ரெண்டு பேரும் ஃபீல் பண்ணியிருந்தா அது அவுங்களுக்கே தெரியும் தானே? திஸ் இஸ் செகண்ட் கொஸ்ஸின்...ஹா ஹா..ஹா இருங்க இருங்க இன்னும் இருக்கு மூணாவது கேள்வி என்ன தெரியுமா? அப்டி அவுங்களுக்கு பிடிக்கலேன்னா கூட நீ சத்தமா சொல்லி அவுங்க மைண்ட்ட இன்ஃபுளுயன்ஸ் பண்ணப் பாக்குறியா? இப்டி எல்லாம் இருக்கு இல்லங்க....

அதனாலதான் லாவோட்சூ அவரை அதிகப் பிரசங்கின்னு சொல்லிட்டுப் போயிட்டார். நாமளும் ஒரு நாளைக்கு எவ்வளவோ பேசுறோம். பேசுங்க தப்பு இல்லை ஆனா பேசுறதுக்கு முன்னால இதோட அவசியம் என்னனு யோசிச்சுட்டு பேசலாமே....? இப்போ உங்க கிட்ட ஒரு முக்கியமான விசயம் சொல்றேன் டென்சன் ஆகாம கேளுங்க...

என்னை சுத்தியும் நிறைய பேரு பேசுறாங்க... ஆனா எனக்கு நிறைய பேர்கிட்ட இருந்து எனக்கு வர்றது எதுவுமே எனக்குத் தேவையே படாதது. பட் ஷேக் ஆஃப் சேயிங் பேசிகிட்டே இருக்காங்க.. .

மறுக்க முடியாதுல்ல பாஸ் வாழ்க்கையில்லையா இதைக் கடந்துதானே போகணும்......! பிரசங்கியா கூட இருக்கலாம்........ஆனா அதிகப் பிரசங்கியா மட்டும் இருக்கவே கூடாதுங்கோ.......!!!!!!

எழுதியவர் : Dheva.S (17-Aug-13, 10:15 pm)
பார்வை : 212

சிறந்த கட்டுரைகள்

மேலே