சூரையாடிய சுனாமி......
கடலில் வாழும் மிருக மீனே.! உன் பசிக்கு
இளம் பச்சிளங்குழந்தைகள் தான் இரையோ.?
அன்று, ஐம்பது அடி அலைபோல் சுழன்று
உன் எல்லையைத் தாண்டியது.,
தரையில் வாழும் மக்களின் வாழ்க்கையை.,
கண்ணீர் என்னும் தண்ணீரில் தத்தளிக்க வைக்கவோ.?
சனியைத் தாண்டியது ஞாயிறு..,உன்னை அடைய,
நீ மக்களை அடைய ஞாயிறை ஆடையாகக் கொண்டாயோ.?
உன்னையே உயிராய் எண்ணி வாழ்ந்த மக்களை
எண்ணிக்கையில்லாமல் அழித்த கொடும் பாவியே.!
மக்கள் தொகை பெருகியது என்று.,
குறைக்க நீ பெருக்கெடுத்து வந்தாயோ.!
கள்ளம் கபடம் இல்லா கருக்குழந்தையை
கர்ப்பிணித்தாயுடன் பருகி சென்ற பாவியே.!
நீ பருகியத் தாயின் மனது தன் குழந்தையின்
உருவை எவ்வாரெல்லாம் கண்டிருக்குமோ.!
நீரே.! உன்னை பல முறை பருகிய மக்களை
நீ ஒரு முறை பருகலாம் என பெருக்கெடுத்தாயோ.!
உலகம் துன்பமயமானது என்று உலகை விட்டு
இன்பமான உறைவிடம் காண எங்கள் உறவினர்களை உறவாடி,
பார்க்கும்போதே களவாடிச் சென்றாயோ.!
தன் பந்தங்களைப் பிரிந்து பசியென்று அழும் குழந்தைக்கு
பாவம் என்று கூற பலர் இருக்கின்றனர்.,
பகிர்வோடு குழந்தையின் பந்த பசி தீர்க்க எவருமில்லை.!
உன் உருவம் தெரியாமல் உறங்கிய உயிர்களை
உதிரம் வராமல் உண்ட உன்னை
தண்டிக்க தண்டனையுமில்லை.,
மன்னிக்க மனவார்த்தைகளும் இல்லை.!
உன் விரிந்து பரந்த நீர்ப்பரப்பை விரிவுபடுத்த.,
நீ பெருக்கெடுத்து விரைந்தாயோ.!
விரைந்து வரும் வில்லைத் தடுக்க எங்களிடம்
உத்திகள் பல இருக்கின்றன.,
வினையாளனே.! உன்னைத் தடுக்க இன்னும்
விந்தைகள் எதுவும் படைக்கப்படவில்லை.!
உன்னைக் கண்டு எங்களால் பயம் கொள்ளத்தான் முடியும்
உன்னைப் பயமுறுத்தும் சக்தி எங்களிடம் இல்லை.!
கடலின் அரசனே..!
இரண்டு உலகப் போரையும் கண்ட உலகம்.,
மூன்றாம் உலகப்போரான உன் போர்முறை கண்டு
மூச்சற்றுப் போனவர்களை எண்ணி முடங்கிப் போனோம் நாங்கள்.!
நீ பெருக்கெடுத்து அழித்த தண்ணீரை விட
பெற்றோர்களை இழந்து தவிக்கும் பிள்ளைகளின் கண்ணீர்.,
தண்ணீர் போல் பேரலைகளையும் மிஞ்சுகிறது.!
மீனவர்களின் அமைதியை மீதமில்லாமல் அழித்த
மிருகத்தின் தலைவனே.! மிருக சுனாமியே.!
மிஞ்சிய உன் எல்லையை இனி நீ மிஞ்சாதே.!
கண்ணீர் விட்டு., கண்ணீர் விட்டு., கண்ணில்
தண்ணீர் கூட வற்றிவிட்டது...
இனி நீ வருகை தந்தால்,
கண்ணில் குருதிதான் வடியும்.!
நீ சூரையாடிய அக்கணத்தை இனி சுழலும் பூமி
எக்கணமும் மறக்காது.!
ஓங்கிய பேரலையே..! இனி ஓய்ந்திடு நீ.!
ஏய் சுனாமியே...!
உன்னால் இறந்த மக்கள் இறக்கவில்லை.,
இருக்கும் மக்கள் இதயத்தில்..!