.............சில நாழிகைகள்...........

என் கவிதைகள் சிலாகிக்கப்படும்பொழுதெல்லாம்,
மனதிற்குள்ளே மறக்காமல் ஓடிடும் நீ என்னை,
அப்படி எழுது இப்படி எழுது,
அளவாய் எழுது நீளம் குறை,
தெளிவாய் எழுது எளிமைப்படுத்து,
புரியவை உணரவை என்றெல்லாம்,
உளியாய் சொல்லெடுத்து செதுக்கிய நிமிடங்கள் !
உடனே !
உள்ளம் தள்ளாடி ஊஞ்சலாடும் மட்டுப்படாமல் !
அதுபோலவே !
அதையெல்லாம் செய்த நீ அருகேயில்லை எனும்போது !
கட்டுப்படாத கண்ணீர்த்துளிகள் இமைகளில் ஊசலாடும் !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (18-Aug-13, 7:23 pm)
சேர்த்தது : bharathkannan
பார்வை : 53

மேலே