நட்பு என்பது வாழ்விலே மெல்லிசை
இசைக்கருவி இன்றி நான்
இசைத்தபடி நடந்தேன்.....
இனிய நண்பன் என்னோடு
இதயம் திறந்து பேசி வந்தான்....
ஆரோகன ஸ்வரங்கள்
அவன் கூறிய ஆறுதல்
அவரோகன ஸ்வரங்கள்
அவன் அன்பு பாஷைகள்
நட்பென்ற கீர்த்தனைகள்
நாங்கள் எழுதும் வர்ணங்கள்.....
நலமாக இசைத்திடுவோம்
நாளும் பொழுதும் நலமாகும்....!!