நட்பு - நோய் தீர்க்கும் மருந்து

இதழ் விரித்துச் சிரிக்கும்
இன்ப விடியலில் மலர்கள்

கதிரவனும் மலர்களும் நம்
கண்கள் முன்னே நண்பர்கள்

இறகு விரித்தே பறக்கும்
இனிய தென்றலில் பறவைகள்

காற்றும் பறவைகளும் நம்
கருத்தில் தெரியும் நண்பர்கள்

பிராணவாயு மேனியை
பிழைக்க வைக்க பயன்படும்

பிடித்த நட்பு இதயத்தை
துடிக்க வைக்கப் பயப்படும்...

ஆக்சிஜன் இருந்தும் இதயத்தில்
அட்டாக் சில நேரம் வரும்...

ஆனால்

அன்பான நட்பிருந்தால்
அட்டாக்கையும் அட்டாக் செய்யும் இதயம்...!

நட்பு - ஒரு நோய் தீர்க்கும் மருந்து....
நட்பாய் இருந்து பாருங்கள் - புரியும்...!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (19-Aug-13, 11:22 am)
பார்வை : 185

மேலே