பொய்மை யாரோடு piranthathu ,,,,,,,,,,,,

உண்மையை மட்டுமே பேசி வாழ முடியுமுன்னு எனக்கு தோணவில்லை
ஒரு வேளை அப்படி யாராவது இருந்தால் எனக்கு தெரியப்படுத்தவும்
பொய்மை ஆளுகின்ற உலகமிது ,இதில் உண்மைக்கு இடமுண்டு,,,,,,,,,,*****
எவனொருவன் நான் சொல்லுவதெல்லாம் உண்மை என்று சொல்லுகின்றானோ அவனே இவுலகின் மிகப்பெரிய பொய்யன்
இன்றைய கால சூழலில் ஒரு நிமிடம் சிந்தித்து பாருங்கள் ,பொய்மையே இல்லாமல் வாழ இயலுமா என்று?

ஒரு கல்யாணம் பண்ணனுமுனா எத்தனை பொய் சொல்ல வேண்டிஇருக்கும்

ஒரு பொய் கூட சொல்லாமல் வேலை கிடைக்குமா

அந்த வேலைய காலமெல்லாம் கொண்டு போகனுமுனா எத்தனை பொய் சொல்ல வேண்டும்

கணவன் கிட்ட மனைவியோ , மனைவிகிட்ட கணவனோ உண்மையா இருக்கணும் , ஆனால்
பொய் சொல்ல வேண்டி வரும் பொழுது கட்டாயம் சொல்ல வேண்டும்

ஒரு உண்மையை சொல்லி கஷ்டம் வரும் என்றால் பொய் சொல்லி சொல்லி அதை சரி செய்வதில் தவறில்லை

பொய்மை, உண்மை என்பது இரு சக்கரம் பூட்டிய வாழ்க்கை வண்டி இதை ஒரு சக்கரம் மட்டும் கொண்டு ஓட்டிச் செல்ல இயலாது

நானும் உண்மையானவன் தான் உண்மை மட்டும் பேசும் உண்மையானவன் அல்ல உன்னை பொய்மை சந்தோசம் செய்கிறது என்றால் அதற்காக பொய்யும் பேசும்
உண்மையானவன்

எனது உண்மை உனக்கு தீங்கு விளைவிக்கும் என்றால் பொய்மை சொல்லி நானே பாவி ஆகிக்கொள்கிறேன்

உண்மைக்கு மட்டும் தான் இந்த உலகில் இடம் என்று வந்தால் அன்று நானே ஆவேன் முதலாவதாய் உண்மையானவனாக

என் உண்மையால் நான் அல்லாத பிறர் வருந்தும் பொழுது எப்படி வாழ்வது உண்மையாக

படித்தவர்கள் சிந்தித்து கருத்து தெர்வியுங்கள்
உங்கள் உண்மை கருத்தை

எழுது பிழைக்கு மன்னிக்கவும்

உங்கள் நண்பன்

சதீஸ்

எழுதியவர் : satheesh (19-Aug-13, 6:39 pm)
சேர்த்தது : Sathesh
பார்வை : 132

மேலே