ராமேஸ்வர மீனவனின் வரிகளுள் சில
சின்னதாய் பல கனவுகளுடன்
மீன்பிடிக்க நான் சென்றேன்
கடல் மாதாவின் உத்தரவுடன்
பெற்ற அன்னையின் நெற்றிபோட்டில் முத்தமிட்டு
நம்பிகையுடன் என் கைகளால்
படகிழுத்தேன் மெல்லிய கீதத்துடன்
வேண்டாம் என்று உரைத்த
அலைகளையும் பொருட்படுத்தாமல்
அப்போது உரைக்க வில்லை
குண்டுகள் பாயும் என்று
இது மீன்களின் சாபமா ??
இல்லை கடல் மாதாவின் ஆணையா ??
இவ்விரு காரணங்களால்
என் உயிர் துறந்தால்
ஏற்கும் என் நெஞ்சம்
அதே மெல்லிய கீதத்துடன்
கயவர்களை
காவலாளிகளாய்
வேற்று நாடு பிழைப்பற்றவர்களாய்
சீண்டிப்பார்க்கும் சிந்தனையாளிகளாய் திரியும் பல பேர்களிடம்
என் தோழர் பல உயிர் பிரிய கண்டேன்
உள் சென்ற அந்த குண்டின் ஆழம் அறியாமல்
தத்தளிக்கும் வாழ்கையை பிடித்துகொண்டு
மீன்பிடிக்க நான் சென்றேன்
துடிதுடிக்கும் நெஞ்சை பிடித்துகொண்டு
பல ஆறறிவு சுறாக்களுக்கு உணவாநேன்
காரணம் எதுமே தெரியாமல் :(
இதில் நியாயதர்மம் அறியாமல் :(
வலைகளின் பேச்சிற்கு கட்டு பட்ட நான்
துப்பாக்கி குண்டின் பேச்சிற்கும் கட்டு பட்டிருக்க வேண்டும்
சந்தர்பம் ஏதும் அமையவில்லை
அதை அமைக்க யாரும் தயாராய் இல்லை
இது மட்டுமா என் துயரம் ??
விழுக்காடுகளில் மிகக்குறைவு இத்துயரம்
சந்தர்பம் ஏதும் அமையவில்லை
அதை அமைக்க யாரும் தயாராய் இல்லை
சின்னதாய் பல கனவுகளுடன்
மீன்பிடிக்க நான் சென்றேன்
- ராமேஸ்வர மீனவனின் வரிகளுள் சில
எனது நான்
- தியான்