எங்கே தேடுவேன்....?
அன்பை பற்றி சிந்திக்கவேயில்லை
பல நாள்……..
ஒரு நாள் வந்தாய்
அன்பாய் இருந்தாய்
அரவணைத்தாய் அன்னையாக
கண்டித்தாய் தந்தையாய்
கணத்தில் நிறைந்து போனாய் கணவனாக
சீண்டிப்பார்த்தாய் நண்பனாக
துன்பம் சொன்னாய் குழந்தையாக
நீயும் தூரப்போகாதே....
நீ போனால்
இத்தனை சொந்தததையும்
எங்கே தேடுவேன்……