வரமா? சாபமா?

பெண்ணாக பிறப்பது
வரம்தான் எனயெண்ணி
மகிழ்வாய் வலம் வந்தால்
ஒருசில ஆண்கள்
நட்புத்தோல் போர்த்தி
ஆனந்தத்திற்கு கல்லறை
கட்டி சாபமாக
மாற்றிவிடுகிறீர்களே ஏன்?

அவளுக்கென்று மனமில்லையா?
அவள் மனதின் எண்ண
அலைகளை எப்போது
புரிந்துக்கொள்ள
பிரயத்தனமெடுப்பாய் நீ?

வாழ்வில் ஏதோ ஒரு
தருணத்தில் அமைதியற்று
ஆறுதல் தேடியலையும்
பெண்ணை நீ
புரிந்துக்கொள்ளாவிடினும்
பரவாயில்லை
புரிந்துக்கொண்டேன்,
உன் வாழ்வில் ஆறுதலாகவும்
துணையாகவுமிருப்பேன் -
நல்ல தோழனாக!
ஆனால் பதிலுக்கு என்
உணர்வுகளுக்கு
வடிக்காலாய்
நீயிரு என
கேட்காமலாவது இரு..
தோழன் என்ற
தோலைப் போர்த்திக்கொண்டு
திரியும் காமுகனாக
இருக்காதே....

எழுதியவர் : நட்சத்திரா (20-Aug-13, 6:38 pm)
சேர்த்தது : நட்சத்திரா
பார்வை : 167

மேலே