பந்தம்

உள்ளத்தின் காயங்கள்
இமைகளை நனைக்க
உணர்வின் ஆழம் மௌனத்தின்
மொழியாகிட ,
கண்களின் ஏக்கம்
தேங்க இங்கே ஓர் இணை
இதயங்கள் உயிர் கொடுத்து
உயிரில் கலந்த தன் பிள்ளையின்
வரவை எதிர்பார்த்து
இமை கொட்டாமல்
தனி மரங்களாய் ஓர்
இலையுதிர்காலத் தனிமையில்
வசந்தத்தின் வரவை எதிர்நோக்கி ..

எழுதியவர் : கார்த்திகா AK (20-Aug-13, 6:49 pm)
சேர்த்தது : கார்த்திகா
Tanglish : pantham
பார்வை : 64

மேலே