மெட்ராஸ் கபே

சிறு நெருப்பென
சிரம் உயர்த்தி
வெறுப்பு உமிழ்ந்து-இன
வெறியர் கைக்குலுக்கி
புறங்கை நக்கும்
புழுகர்கள் வடித்த
புரட்டுக் கதை
திரட்டி வடிக்க
திரைப்படமாய்
திரள்வர் தமிழர்
மிரள வையம்
திமிறினால் பகைவர்
திசை அறிய தலைகளை
கொய்து எறிவர் தமிழர்