சகோதரி!...

நான் பிறந்ததும் என்னை
முதலில் வாங்கியதும் நீ!..

பள்ளி பருவத்தில் நான் செய்த தவறுக்கு
சேர்த்து அடிவாங்கியவள் நீ!...

கல்லூரி காலத்தில் சாமக்கோடாங்கி
போல் வீடு திரும்பும் எனக்கு!..

தாயும் தந்தையும் கோவித்து கதவடைக்க
கொல்லை கதவை திறந்துவிட்டவளும் நீ!...

சண்டை போடுகையில்
நான்செய்த தவறை சுட்டிக்காட்டி
அதே சமயம் பெற்றோரிடமிருந்து
என்னை காத்தவளும் நீ !...

காதல் பிடியில் சிக்கி தவித்த காலத்தில்
எனக்காக காதலியிடம் சமாதானம்
செய்தவளும் நீ!...

வேலை இல்லாமல் வாழ்வை வெறுத்த காலத்தில்
வாழ்வை தெளிவு படுத்தியவள் நீ!..

முதல் மாத சம்பளத்தில்
அம்மாவிற்கும் சேலை வாங்கித்தர
நான் கொடுத்த இனிப்பே போதும் என்று
புன்னகை செய்தவளும் நீ!...

பண்டிகை நாளில் மாமியார் வீட்டில்
துணியெடுக்கையில் எனக்கும் சேர்த்து எடுத்தவள் நீ!...

இப்படி என் வாழ்வில் எல்லா கட்டத்திலும்
தோழியாய் என்னை காத்த உனக்கு
இந்நாளில் நன்றி கூறுகிறேன்!....

எழுதியவர் : (20-Aug-13, 5:12 pm)
சேர்த்தது : உங்களுக்காக
பார்வை : 180

மேலே