காற்றில் பறந்த எனது கவிதைத் தாள்கள்

காற்றடித்த போது உருண்டது
கண்ணிற்கினிய ரசனைப் பேப்பர் வெயிட்டு...!

தைக்கப் படாத கவிதைத்
தாள்கள் தாழ இல்லாமல் மேல பறந்தது.....!

அவை..........அந்த.... விண்ணில் நான் கண்ட
அழகான இறகு விரித்த பறவைகள்..........

அதன் சிறகடிப்பில் படபட ஒலி.....
ஆங்கில வார்த்தைகளின் ஆணவச் சிரிப்பு....

அமைதியாக வீசும் தென்றல் காற்று....
அதை இசையாக மாற்றும் தமிழ் வார்த்தைகள்....

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (20-Aug-13, 7:01 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 133

மேலே