ஆண்டி அரசனானான்
இன்று ஒரு நல்ல நாள்
என்று மனதில் தோன்ற
கையில் ஒரு கோப்பை
தேனீருடன் அமர்ந்தேன்
பொழுது புலரும் போது.
இன்று நமக்கு ஒரு நற்செய்தி
வரும் என்று என் உள் மனது
சொல்லுகிறது பல முறை.
சற்று நிதானித்த போது
என்னுள் உணர்ச்சி
மெதுவாக எட்டிப் பார்த்தது.
நடக்கும் என்ற உறுதியும்
நடப்பது போன்ற நிகழ்வும்
நமது கற்பனையே
நமது மனதின் வெளிப்பாடே
நினத்ததெல்லாம் நலன்தால்
எண்ணங்கள் எல்லாம் செயல்களாக மாறும்
உணர்வுகளெல்லாம் கவிதையாக உருவாகும்
ஆண்டியும் அரசராகத் தோன்றுவார்கள்
இல்லாதவன் யாவுமகிவிடுவான்.
இருப்பவன் பாடு திண்டாட்டம்