தமிழ் தெய்வம்
தமிழ் எந்தன் தாயல்ல
தாய்மை மட்டுமவள் குணமல்ல....
உணர்வாய் தன் உரவாய்
உயிரொன்று கருவுற்றுக் காத்திருக்க
தாய்மையெனும் தனிக்கர்வம்
தரித்த மகள் அவளல்ல...!!
தரைதொட்ட தேன் மழலை
தாயென்று சொல்லுகயில்
சொல் மட்டும் சுமந்தவளை
சேர்ந்திடவே...
சொன்ன மொழியதுவும்
தமிழ் தெய்வம் தந்திட்ட
சொத்தன்றோ...??