காலமாய் பேசிடும் ஓவியங்கள்

தீட்டிய ஓவியத்தில் தூண்டிடும் பார்வை
தீண்டிடும் விழிகளை தீயாக்கும் பாவை !
தூரிகை மந்திரத்தில் பிறந்திட்ட காரிகை
தூணில் சாய்ந்திட்ட மின்னலாய் தாரகை !

அழகுச் சிலையாய் அமர்ந்துள்ள பெண்மை
ஆடை அணிகலனால் கவர்ந்தார் நம்மை !
ஆடை களைந்து வெண்ணெய் எடுப்பதை
அழகாய் சித்தரிக்கும் வண்ணப் படமிது !

ஓவியர் நினைத்தால் சித்திரம் உயிராகும்
ஓவியம் சொல்லிடும் ஆயிரம் கதைகளை !
காலமாய் பேசிடும் ஓவியங்கள் உண்டு
காவியம் படைத்த ஓவியர்களும் உண்டு !

வரலாற்றுக் கதைக்கு வரைந்த படமும் உண்டு
வரலாறு படைத்த படங்களும் உலகில் உண்டு
வாழ்ந்திடும் அவை நாம வாழ்ந்து முடிந்த பின்னும்
வாழ்த்துவோம் அதனை வாழ்ந்திடும் நாளெலாம் !

ஆடை = அணிந்திடும் ஆடை
ஆடை = மிதந்திடும் பாலாடை


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (22-Aug-13, 5:37 pm)
பார்வை : 81

மேலே