+என்ன ஒரு விளையாட்டு!+

தானே போட்ட
புள்ளியில்லா கோலத்தை
அடிக்கொருமுறை
இல்லையில்லை
நொடிக்கொருமுறை
மாற்றி மாற்றி
போட்டுக்கொண்டே இருக்கிறது
சலிப்படையாமல்
இந்த வானம்!

இது என்ன விளையாட்டு!?
அசதியே ஏற்படாமல்
புதுப்புது வகையான
அழகழகான கோலங்களை
யாரைப் பார்த்து கற்றுக்கொண்டு
போடுகிறதோ!

இல்லை
யார் இதற்கு
வேலை மெனக்கெட்டு
சொல்லிக்கொடுத்தார்களோ!

பார்க்கப் பார்க்க
பிடிக்கும் இந்த கோலங்கள்!
வானத்தின் இரத்த நாளங்கள்!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (22-Aug-13, 5:47 pm)
பார்வை : 110

மேலே