இதழ்"கள்"

மதுவையும் வெல்லும் பெண் இதழ்"கள்".......
இதை பருகினால்
கண்ணில் சொர்கம் கண்கள் சொறுகும்
இதயம் வெடிக்கும் புலோகம் மறக்கும்
மேலோகம் வசிக்க இடமாகும்

இருபின்னும் அவள் இலை போன்ற
இதழ்களில் உண்டேன் அறுசுவை.......

அடடா இது அமுதடா !!!

இதுவரை யாரும் கடையத அமிர்தமடா!!!!!
அவள் இதழ்"கள்" என்னை ஆட்கொண்ட போது
எனை நான் மறந்து தலை சுற்றி அலைந்தேன்
பசிக்கும் ருசிக்கும் பொருள் அறிந்தேன்
அவள் இதழ்களால் போதைக்கு அடிமையானேன்
இதுதானோ இதழ்"கள்" போதை???

எழுதியவர் : வெற்றிக் கண்ணன் (22-Aug-13, 7:45 pm)
சேர்த்தது : VK
பார்வை : 94

மேலே