கோயில்

அளவோடு தெறிக்கும் சினமே கொண்டும்
அளப்பரிய அன்பை அகத்தே கொண்டும்
தன்னை உணர்ந்த மனமே கொண்டும்
தன்னில் தேடும் தேடல் கொண்டும்
கண்ணில் வாழும் கருணை கொண்டும்
உதவிட ஆயத்த எண்ணம் கொண்டும்
பதவி பெற்றும் பணிவே கொண்டும்
பதறாது செய்யும் செயலே கொண்டும்
சிதறா சிந்தையில் சீரிளமை கொண்டும்
உயர்விலும் மாறா குணமே கொண்டும்
தாழ்விலும் தளரா உறுதியே கொண்டும்
வாழ்ந்திடும் மனிதர் தம்
பொய்யற்ற நெஞ்சத்தினுள்
மெய்யான இறைவனவன்
கரிசன வடிவில் நின்றே
தரிசனம் தருகின்றான் .
அகம் அதில் அவனே உறைவதினாலே
புறமே (மெய் ) கோயில் என்றாகிடுமே .

எழுதியவர் : திகம்பரன் (22-Aug-13, 8:22 pm)
Tanglish : koyil
பார்வை : 83

மேலே