சகோதரா

நாட்டை நல்லா
ஆள வந்த சகோதரா...
ரோட்டு மேல
தள்ளாடி ஏனோ நடக்குறா...

நல்லோரின் வழியை
எல்லாம் மறுக்குறா...
தீயோரின் வழியிலத்தான் கெடக்குறா...

உள்ளதெல்லாம்
சொல்லிப்புட நெனைக்குறேன்...
நல்லதெல்லாம்
நடக்கமுன்னு நம்புறேன்...

குடிச்சி ஆடிட்டு
குலக் குடியை கெடுக்குறா...
முடிச்சிப் போட்ட
உன் உறவ உதைக்குறா...

வேணாம் போதை தம்பி
அது சாத்தான் பாதை...


அன்புடன்

நாகூர் கவி.

எழுதியவர் : muhammadghouse (22-Aug-13, 8:33 pm)
பார்வை : 102

மேலே