இராணுவ வீரன்

பாரத மாதாவை
பகையழித்துப் பாதுகாக்க
பரிவுடனே நீஎழுந்து
போருக்குப் புறப்படுக...

தமிழனப் படுகொலையை
தயங்காமல் செய்துவரும்
சிங்கள வெறியர்களை
சினம்கொண்டு நீஅடக்கு

எல்லை தாண்டிவந்து
எம்மண்ணில் கால்பதிக்கும்
சீன எதிரிகளை
சீறியே நீஅடக்கு

சிலகாலம் முன்புவரை
சக உதரர் என்பதனால்
பாக்கிஸ்தான் பகைவர்களை
பாங்குடனே நீஅடக்கு

வெளிநாட்டு உதவியுடன்
வீரூகொண்ட சக்திகளாம்
தீவிர வாதிகளை
திறம்கொண்டு நீஅடக்கு

சீற்றம் அடங்குமுன்பு
சிலர் அடங்கிப்போவதுண்டு
அடங்குவதும், அடக்குவதும்
அவரவரின் விதிப்பயனே

இருப்பதுவும், போவதுவும்
இறைவனது கைகளிலே
இதையறிந்து நிலையுணர்ந்து
இறையாண்மை காக்கச்செல்.

இராணுவ வீரனே,
நம்நாட்டின் இறையாண்மை காக்கச்செல்...

எழுதியவர் : காரைக்குடி ச சரவணன் (22-Aug-13, 9:15 pm)
Tanglish : iraanuva veeran
பார்வை : 1285

மேலே