மண்ணில் இவர்கள் மானிடர்களா ! (பழனி குமார் )
![](https://eluthu.com/images/loading.gif)
இளைஞர்கள் கையில் இன்றைய உலகம்
இருந்தும் புரிந்தவர் சிலரே இதனை !
எதிர்காலத்தை எண்ணிடும் இளைஞர்
எண்ணிக்கை குறைவே அது வேதனை !
பேருந்தில் பயணமே சிக்கல் இன்று
பேராபத்து இதுவோ மேலே நிற்பது !
விடலைப் பருவத்தின் விளையாட்டா
விலையிலா உயிரோடு சாகசமா !
உயிரின் மதிப்பை அறியாதவர்களா
உயரத்தில் நின்றிடும் அறிவிலிகளா !
மக்களின் சொத்தை அழிப்பவர்களா
மண்ணில் இவர்கள் மானிடர்களா !
பழனி குமார்