பெண்கள்

அன்பிற்கு இலக்கணமாய் இருப்பவளே
ஆதி அந்தமாய் இருப்பவளே
இமயம் தொட்டு உணர்ந்தவளே
ஈகை மனபான்மையை கற்று கொடுத்தவளே
உலக பாரதத்தாய் ஆனவளே
ஊதாரியை இருந்தவனை திருத்தியவளே
எட்டு திசைகளிலும் இருப்பவளே
ஏக்கத்தால் தவித்துக்கொண்டு இருப்பவளே
ஐம்புலன்களை அடக்க கற்றுக்கொடுத்தவளே
ஒற்றுமையை சமர்பித்து கொண்டு இருப்பவளே
ஓடம் போல் எண்ணங்களை மிதக்க விடுபவளே
ஔஷதம் என்னும் மருந்தனவளே
மனிதரை உருவாக்கியவளே
மனித உருவை கருவக்கியவளே
விண்ணுலகிலும் மண்ணுலகிலும் சாதித்து கொண்டிருப்பவளே
பூமியை மழைத்துளி முத்தமிடுவது போல
உன்னை இவ்வுலகை தொட வரவேற்கிறோம்

எழுதியவர் : vinayak (23-Aug-13, 12:11 pm)
பார்வை : 78

மேலே