சற்று கேளடி

இது
யார்விட்ட சாபம்
இவள்
என் மீது
கொள்ளும் கோபம்.

காவு போகும்
ஆட்டுக்கும்
தலை அசைக்க
நீர் கிடைக்கும்.
வரவு வைக்காமல்
செலவு கணக்கில் சேர்க்கிறாய்.

வேண்டுதலை
வேதனையோடு சொல்லிவிட்டேன்
வேர் அறுத்து
வெயிலில் காயவிட்டாய்.

காயம் நூறு
தந்து விட்டால்
சாயம் போகுமென
நினைத்துவிட்டாய்.

என் தோட்டத்து
காதல் பூவுக்கு
உன் காலடியில்
தான் அடைக்கலமா?

மின்னலாய் தோன்றி
மறையதன்று
மன்னவன் கொண்ட காதல்
மின்மினி பூச்சியை போன்று
மண்ணில் விழும்வரை
ஒளிக்கும் நின்று.

எண்ணி எண்ணி
விழ்வதல்ல
வான் பொழியும்
மழைதுளி
என் காதல்
அவ்வினம் அறிவாயே!!

-செஞ்சிக்கோட்டை மா.மணி

எழுதியவர் : -செஞ்சிக்கோட்டை மா.மணி (23-Aug-13, 1:19 pm)
பார்வை : 93

மேலே