படிக்க வெச்சுது தப்பாப் போச்சு…!

யாரோ எழுதிக் கொடுத்ததை தலைவர் மேடையில்
படிக்கிறார்னு எதிர்க்கட்சி குற்றம் சொல்லிச்சே,
தலைவர் என்ன பதில் சொன்னார்…!
-
எனக்கு எழுதப் படிக்க தெரியாதுன்னு சொல்லி
சமாளிச்சுட்டாரு…!
-
——————————————–
-
மன்னா, காளைப்படை ஒன்றை நமது படையில்
சேர்ப்போமா?
-
நான்தான் காலையே படையாக வைத்து இருக்கிறேனே
காளைப்படை என்று எதற்கு தனியாக…!
-
—————————————
-
திருட வந்தவனிடம் வீட்டுகாரர் கேட்டார்:
யாரிடம் மொபைல் போனிலே பேசுறே?
-
என் மனைவி கூடத்தான்!..பட்டு சேலை மூன்று இருக்கு
எது வேணுமின்னு கேட்டுக்கிட்டிருக்கேன்…!
-
——————————————-
-
பையனை வக்கீலுகுப் படிக்க வெச்சது தப்பா போச்சா
ஏன்?
-
படிச்சு முடிச்ச கையோட, சொத்தை பிரிச்சு கொடுக்க
சொல்லி எனக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கான்..!
-
——————————————-
(படித்ததில் பிடித்தது)

எழுதியவர் : கே இனியவன் (24-Aug-13, 11:49 am)
பார்வை : 385

சிறந்த நகைச்சுவைகள்

மேலே